உன்னையன்றி வேறேகதி ஒருவரில்லையே ஸ்சுவாமி
அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?
அதிசய மனுவேலா! ஆசை என் இயேசு ஸ்வாமி!
1.
பண்ணின துரோகமெல்லாம் – எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை, – பரதவித்தேனே தேடி
கண்ணினாலுன் திருவடிக் – காண நான் தகுமோதான்?
கடையனுக்கருள்புரி – மடியுமுன் இயேசு ஸ்வாமி! – உன்னையன்றி
2.
அஞ்சியஞ்சித் துார நின்றேன் – சஞ்சலங்களை நான் சொல்லி,
அலைகடல் துரும்புபோல் – மலைவு கொண்டே னானையோ!
கெஞ்சிக் கெஞ்சிக் கூவு மிந்த – வஞ்சகன் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபைவை இயேசு ஸ்வாமி!- உன்னையன்றி
3.
எத்தனை கற்றாலும்தேவ – பக்தியேது மற்ற பாவி,
எவ்வளவு புத்திகேட்டும் – அவ்வளவுக்கதி தேரி
பித்தனைப் போல பிதற்றிக் – கத்தியே புலம்பு மேழைப்
பேதையைக் கடைத்தேற்றிப் – பிழைக்கவை இயேசு ஸ்வாமி!- உன்னையன்றி
4.
கள்ளனாம் கபடனென்னைத் – தள்ளிவிட்டா லாவதென்ன,
கல்லைப்போல் கடினங்கொண்ட – கர்ம சண்டாளன் பாழும்
உள்ளமுங்கரைந்தே உன்றன் – உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய் – உருகவை இயேசு ஸ்வாமி!- உன்னையன்றி
unnaiyanri verekathi oruvarillaiye shuvami
annai dhanththai utrrar sutrrar – aarumudhavuvareா?
athichaya manuvela! aasai en iyesu shvami!
1.
pannina thurokamellam – ennina lethdhanaikeாdi
badhakaththuk kundo ellai, – paradhaviththene thedi
kanninalun thiruvadik – kana nan dhakumothan?
kadaiyanukkarulburi – madiyumun iyesu shvami! – unnaiyanri
2.
anjsiyanjsith thura nindren – sanjchalangkalai nan seாlli,
alaikatal thurumbubol – malaivu konde nenaiyo!
kenjsik kenjsik kuvu minthdha – vanjchakan mukambarayk
kiddi ennidam sernththu kirubaivai iyesu shuvami!- unnaiyanri
3.
ethdhanai karralumtheva – pakthiyethu marra bavi,
evvalavu buththikeddum – avvalavukkathi theri
bithdhanaib pola bidharrik – kaththiye bulambu mezaib
bethaiyaik kadaiththerrib – bizhaikkavai iyesu sa்vami!- unnaiyanri
4.
kallanam kapatanennaith – dhallividda lavathenna,
kallaipol kadinangkonta – karma chandalan bazhum
ullamungkarainththe unran – uyar siluvaiyinanbal
ulaiyilidta mezhukay – urukavai iyesu sahuvami!- unnaiyanri